×

ராஜஸ்தானில் ராஜ்புத் இயக்கத் தலைவர் சுட்டுக்கொலை


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இயங்கிவரும் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவர் சுக்தேவ் சிங். ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த 3 பேர் அவரை சந்தித்து 10 நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். பிறகு, திடீரென துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட்டனர். சுக்தேவ் தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுக்தேவ் ரத்த வெள்ளத்தில் பிணமானார். மர்மநபர்கள் சுட்டதில் அவருடைய பாதுகாவலரும் படுகாயமடைந்தார்.இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post ராஜஸ்தானில் ராஜ்புத் இயக்கத் தலைவர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Rajput ,Rajasthan Jaipur ,Sukhdev Singh ,Rashtriya Rajput Karni Sena ,Rajasthan ,Jaipur ,Dinakaran ,
× RELATED ராஜபுத்திரர்கள் பற்றி அவதூறு பேச்சு...